இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டுப் பிரபலங்களில் மூன்றாவது நபராக விராட் கோலி உள்ளார். முதல் இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். இந்த தகவலை ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

புகைப்படம் மற்றும் காணொளி ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாக உள்ளனர். இவர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்றவராக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. சுமார் 59,68,48,846 பேர் அவரை இந்த தளத்தில் பின்தொடர்கின்றனர்.

Advertisement

அர்ஜென்டினாவை சேர்ந்த லியொனல் மெஸ்ஸியை 47,92,68,484 பேர் இன்ஸ்டாவில் பின்தொடர்ந்து வருகின்றனர். கோலியை, 25,52,69,526 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தாங்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவது உண்டு. அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும். 

அந்த வகையில் விராட் கோலி பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.25 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். 2022ஆம் ஆண்டு விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு ரூ.3.25 கோடி வரை மட்டுமே வருமானம் ஈட்டி வந்தார். தற்போது 2023ஆம் ஆண்டின் 8 மாதத்திலேயே இன்ஸ்டாகிராமின் ஒரு பதிவிற்கான வருமானம் ரூ.8 கோடி வரை உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வீரர் என்பதை விடவும், இன்ஸ்டாகிராம் மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும்  பட்டியலில் விராட் கோலி 5ஆவது இடத்தில் இருகிறார். இதில் விளையாட்டு வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் விராட் கோலிக்கு மேல் நட்சத்திர கால்பந்து வீரர்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் இருக்கின்றனர்.

உலகிலேயே 600 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை வைத்துள்ள ரொனால்டோ, ஒரேயொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். அதேபோல் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.21.5 கோடி வருமானம் ஈட்டுகிறார். மேலும், இந்தியாவில் விராட் கோலிக்கு பின் அதிக வருமானம் ஈட்டும் நபராக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.4.4 கோடி வருமானம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News