ஒரு ரன்னில் வெற்றியை இழந்த ஆர்சிபி; களத்தில் கண்ணீர் விட்ட ரிச்சா கோஷ்!

Updated: Mon, Mar 11 2024 14:31 IST
ஒரு ரன்னில் வெற்றியை இழந்த ஆர்சிபி; களத்தில் கண்ணீர் விட்ட ரிச்சா கோஷ்! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற, 17ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலிஸ் கேப்ஸி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 58 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 48 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை துரத்தியா ஆர்சிபி அணியின் கடும் போட்டியை டெல்லி அணிக்கு வழங்கியது. 

அந்த அணியில் சோஃபி மோலினக்ஸ் 33, எல்லிஸ் பெர்ரி 49, சோஃபி டிவைன் 26 மற்றும் இறுதிவரை போராடிய ரிச்சா கோஷ் 51 ரன்களையும் சேர்த்தனர். ஆனால் அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் வெற்றிபெற 17 ரன்களை தேவை என்ற நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட ரிச்சா கோஷ் முதல் பந்தில் சிக்சரையும், 4ஆவது பந்தில் 2 ரன்களையும், 5ஆவது பந்தில் சிக்சரையும் என அடித்த்து ஆர்சிபி அணி கிட்டத்திட்ட வெற்றியை உறுதிசெய்தது. 

ஆதன்பின் ஆர்சிபி அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்டெ ரிச்சா கோஷ் பேக்வேர்த் திசையில் பந்தை அடித்துவிட்டு ஓட முயன்றார். அத்திரையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷஃபாலி வர்மா பந்தை பிடித்தவுடனே பந்துவீச்சாளர் முனைக்கு த்ரோ அடிக்க, அதனைப்பிடித்து ஜோனசென் ஸ்டம்புகளைத் தகர்த்தா. ஆனால் அதற்குள் ரிச்சா கோஷால் க்ரீஸை எட்ட முடியவில்லை. 

 

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து இலக்கை எட்டமுடியாத சோகத்தில் இறுதிவரை போராடிய ரிச்சா கோஷ் களத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார். இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் அவரிடம் சென்று ஆறுதல் கூறினர். அதன்பின் ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், ரிச்சா கோஷை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். இந்நிலையில் இக்காணொளியானது வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை