இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய ஹர்லீன் தியோலும் 29 ரன்களுடன் விக்கெட்டை இழந்தர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிச்சா கோஷும் விக்கெட்டை இழந்தார்.

Also Read: LIVE Cricket Score

இறுதியில் தீப்தி சர்மா 24 ரன்னிலும், காஷ்வி கௌதாம் 17 ரன்களையும், ஸ்நே ரானா 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது. இலங்கை மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுகந்திகா குமாரி மற்றும் கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News