CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!

Updated: Mon, Feb 03 2025 22:48 IST
Image Source: Google

ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்க அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். 

இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்சமயம் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இத்தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடும் என்று தெரிவித்துள்ளார். 

இருப்பினும் அந்த குரூப்பில் உள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளும் அரையிறுதிக்கான வாய்ப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தியா மற்றும அஸ்திரேலிய அணிகள் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலிய  அணியின் முன்னாள் ஜாம்பவன் ரிக்கி பாண்டிங்கும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற தனது கணிப்பை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர்,  "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை மீண்டும் தோற்கடிப்பது கடினம். இரு நாடுகளிலும் உள்ள வீரர்களின் தரத்தைப் பற்றி இப்போது யோசித்துப் பாருங்கள், இந்த பெரிய இறுதிப் போட்டிகள் மற்றும் பெரிய ஐசிசி நிகழ்வுகள் வரும்போது சமீபத்திய வரலாற்றைப் பாருங்கள். நிச்சயமாக அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இருப்பார்கள். தற்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடி வரும் மற்றொரு அணி பாகிஸ்தான்.

Also Read: Funding To Save Test Cricket

கடந்த சில வருடங்களாக  பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கிரிக்கெட் சிறப்பாக இருந்துள்ளது. பெரிய போட்டிகளில் அவர்கள் எப்போதும் கணிக்கக்கூடிய அணியாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்களைச் சரிசெய்துவிட்டதாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரது கணிப்புகளும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை