ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக அந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கின. மேற்கொண்டு மிடில் ஆர்டர் வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதான் காரணமாக நான்காம் வரிசையில் மீண்டூம் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கவுள்ளார் என்று அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தனது வழக்கமான பேட்டிங் ஆர்டரில் களமிறங்கவுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித்தும் சமீபத்தில் அறிவித்தார். இதனால் புதிய தொடக்க வீரரை தேடும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணி இறங்கியுள்ளயுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனியை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “முன்னதாக நான் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த தொடக்க வீரராக சாம் காண்டாஸை களமிறக்கலாம் என கூறியிருந்தேன். ஆனால் அவர் மிகவும் இளமையாகவும், அனுபவமில்லாமலும் இருக்கிறார். இதனால் நான் கொஞ்சம் பொறுமையாக யோசித்தேன். மேலும் அவர் பெர்த் மற்றும் காபா மைதானங்களில் விளையாடவும் இல்லை. அடிலெய்டு மைதானத்தில் அவர் பிங்க் பந்து டெஸ்டிலும் விளையாடியது கிடையாது.
எனவே அவருக்கு எதிராக நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு திறமை இருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் அப்போது சொன்ன மற்றொரு விஷயம் என்னவென்றால், கேமரூன் பான்கிராஃப் மற்றும் மார்கஸ் ஹாரிஸையும் தொடக்க வீரர்களாக செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் அதைச் செய்யத் தயாராக இருந்தால் அவர்கள் அதை கடந்த ஆண்டே செய்திருப்பார்கள்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் தற்சமயம் ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் மற்றொரு தேர்வாக ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனியை பார்க்கிறேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்க சரியான வீரராக அவர் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் திறமையான வீரர், ஆஸ்திரேலியாவுக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.