டி20 உலகக்கோப்பை தொடரில் இவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்துவார்கள் - ரிக்கி பாண்டிங்!

Updated: Thu, May 30 2024 15:21 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர். 

அந்தவகையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்கும் வீரராக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரராக ஜஸ்ப்ரித் பும்ராவும் இருப்பார்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,”இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக ஜஸ்பிரித் பும்ராவை நான் தேர்வு செய்வேன். 

அவர் இப்போது ஒரு சிறந்த போட்டியாளராகவும், பல ஆண்டுகளாக பங்களிப்பாளராகவும் நினைக்கிறேன். மேலும் அவர் ஒரு சிறந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளார். அவரால் புதிய பந்தில் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளார். ஏனெனில் புதிய பந்தை ஸ்விங் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. மேற்கொண்டும் அவர் ஐபிஎல் தொடர் முழுவது 7க்கும் குறைவான எகானமியில் பந்துவீசியுள்ளர். அத்துடன் அவர் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

அவர் பல கடினமான ஓவர்களையும் வீசுவார். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் கடினமான ஓவர்களை வீசும்போது, ​​அது உங்களுக்கு நிறைய விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பளிக்கிறது. எனவே, நான் அவர் மீது முழு நம்பிக்கையை வைப்பேன். அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரராக டிராவிஸ் ஹெட்டை தேர்வு செய்வேன். 

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களில் சிவப்பு பந்தாக இருந்தாலும், வெள்ளைப் பந்தாக இருந்தாலும் அவர் செய்த அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் தற்போது அச்சமற்ற கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்று நினைக்கிறேன். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அவரது அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடியது மிகவும் நன்றாக இருந்தது. மேலும் இது அவரது அணிக்காக வெற்றிகளையும் பெற்றுத்தந்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை