Rishabh Pant Reords: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி துணைக் கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்ததன் மூலம் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

Advertisement

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் சதமடித்ததன் மூலம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

எம்எஸ் தோனியின் சாதனை முறியடிப்பு

இந்த போட்டியில் ரிஷப் பந்த் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்சமயம் ரிஷப் பந்த் 44 டெஸ்ட் போட்டிகளில் 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து சாத்னைப் படைத்துள்ளார். 

ரிஷப் பந்தின் டெஸ்ட் சதங்கள்:

  • இங்கிலாந்துக்கு எதிராக 114, தி ஓவல் (2018)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 159*, சிட்னி (2019)
  • இங்கிலாந்துக்கு எதிராக 101, அகமதாபாத் (2021)
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 100*, கேப் டவுன் (2022)
  • இங்கிலாந்துக்கு எதிராக 146, பர்மிங்காம் (2022)
  • வங்கதேசத்திற்கு எதிராக 109, சென்னை (2024)
  • இங்கிலாந்துக்கு எதிராக 134, லீட்ஸ்க்கு எதிராக 134
Advertisement

முதல் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்

இந்த சதத்தின் மூலமாக ரிஷப் பந்த் இங்கிலாந்து மண்ணில் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் சதங்களை அடித்த உலகின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். முன்னதாக ரிஷப் பந்த் கடந்த 2018ஆம் ஆண்டு ஓவல் டெஸ்ட் போட்டியிலும், 2022ஆம் ஆண்டு பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியிலும் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சதங்கள்

Advertisement

இதுதவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரிஷப் பந்த் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்துள்ளர். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் கூட்டாக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் 9 சதங்களுடன் முதலிடத்திலும், ஷுப்மன் கில் 6 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தலா 5 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News