கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நடிகைகளுக்குமான காதல் அல்லது கிசுகிசு என்பது காலங்காலமாக தொடர்ந்துவருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் நடிகை நக்மாவுக்கும் இடையே காதல் என சில காலம் பரபரப்பாக பேசப்பட்டது. 

Advertisement

அதைத்தொடர்ந்து தோனி - ராய் லக்ஷ்மி, விராட் கோலி - தமன்னா என தொடர்ச்சியாக, அந்தந்த காலக்கட்டங்களில் இந்திய அணியின் பெரிய கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்த வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் காதல் என்று தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து பொதுவெளியில் காணப்பட்டதுதான், இந்த கிசுகிசுக்களுக்கு காரணமானதே தவிர, கிசுகிசுக்கள் காரணமில்லாமல் எழவில்லை. 

Advertisement

விராட்கோலிக்கு தமன்னாவுடன் காதல் என தகவல் ஆரம்பத்தில் பரவினாலும், அவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து, 2017 டிசம்பரில் திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக, நடிகையுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டது ரிஷப் பந்த் பெயர் தான். இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலமாக நம்பப்படும் ரிஷப் பண்ட், மிகப்பெரிய வீரராக வளர்ந்துள்ளார். 2018ஆம் ஆண்டு ரிஷப் பண்ட்டுக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் அது அப்படியே அடங்கிப்போனது.

இந்த ஊர்வசி ரவுத்தேலா தான், அண்மையில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய ஊர்வசி ரவுத்தேலா, நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு சென்றேன். 10 மணி நேரம் தொடர்ச்சியான ஷூட்டிங்கிற்கு பிறகு ரூமுக்கு திரும்பினேன். அங்கு என்னை பார்க்க வந்த ரிஷப் பந்த் எனக்காக நீண்டநேரம் லாபியில் காத்துக்கொண்டிருந்தார். நான் மிகுந்த சோர்வாக இருந்தேன். அதனால் எனது ஃபோனை கவனிக்கவில்லை. எனது ஃபோனுக்கு நிறைய மிஸ்டு கால்கள் வந்திருந்தன. 

நான் தூங்கி எழுந்தபோது 16-17 மிஸ்டு கால்கள் இருந்தன. எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. பொதுவாக பெண்களுக்கு காக்கவைப்பது பிடிக்கும். அதன்பின்னர் அவரை தொடர்புகொண்டு, மும்பைக்கு வரும்போது சந்திப்போம் என்று கூறிவிட்டேன் என்றார் ரவுத்தேலா.

Advertisement

இதில் அவர் Mr. RP என்று குறிப்பிட்டிருப்பது ரிஷப் பண்ட்டைத்தான் என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டியை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில், “வெற்று விளம்பரத்திற்காகவும், தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காகவும் சிலர் நேர்காணலில் பொய்களாக பேசுகின்றனர். வெற்று பிரபலத்திற்காக பொய்களை அள்ளி தெளிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டார்.

ஆனால் தனது அந்த பதிவை ரிஷப் பந்த் நீக்கிவிட்டபோதிலும், அதற்குள்ளாக அதை ரசிகர்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்ததால் அது வைரலாக பரவிவருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News