என்னுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன் - விபத்து குறித்து மனம் திறந்த ரிஷப் பந்த்!

Updated: Mon, Jan 29 2024 22:54 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அனைத்து விட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்த ரிஷப் பந்த், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதம், 11 அரைசதங்களுடன் 2,271 ரன்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 865 ரன்களையும், 66 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 935 ரன்களையும் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோசமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். அதன்பின் நடக்கவே முடியாடஹ் நிலையில் மருத்துவ சிகிச்சைப்பெற்று வந்த அவர், தற்போது ஒருசில மாதங்கங்களாக நடக்க ஆரம்பித்து பயிற்சிக்கும் திரும்பியுள்ளார். தற்சமயம் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

மேலும் வரவுள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனக்கு நடந்த கார் விபத்து குறித்து முதல் முறையாக ரிஷப் பந்த் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அந்த நிகழ்வின் போது என் வாழ்வில் முதல் முறையாக இந்த உலகில் என்னுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன். விபத்தின்போது காயம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியும். விபத்தில் மிகவும் தீவிரமான காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் ஆனால் என் அதிர்ஷ்டத்தால் காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.

அந்த விபத்தின்போது என்னை யாரோ காப்பாற்றினார்கள் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. இந்த விபத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என நான் மருத்துவரிடம் கேட்டேன். அவர் தற்கு, 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என கூறினார். இந்த காயங்களில் இருந்து விரைவில் குணமடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை