இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்திருந்தார். தற்போதுதான் அதிலிருந்து அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார்.

Advertisement

காயத்தின் காரணமாக, அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். ரிஷப் பந்த் முழுமையாக குணமடைந்து கிரிக்கெட் விளையாட இன்னும் 8 முதல் 9 மாதங்கள் ஆகும் என்றும் இதனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இந்த நிலையில், சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பந்த், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ள நிலையில், அவர் விரைவில் உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக, நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் விளையாடிய போட்டியை காண ரிஷப் பந்த் நேரில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News