ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ரிஷப் பந்த்? சிஎஸ்கே-வில் இணைய வாய்ப்பு!

Updated: Sat, Jul 20 2024 14:20 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதில் கேகேஆர் அணி வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.

இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.  அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அங்கும் வகித்து வந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 

ரிக்கி பாண்டிங்கின் பயிற்சிக்கு கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியும், 2021ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தவிர்த்து மற்ற சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களிலும் மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து தான் ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் டெல்லி அணி ரசிகர்களுக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியாகியுள்ளது. அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த், அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருந்து விலகயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ரிஷப் பந்த் தலைமையின் கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக செயல்படாத காரணத்தால் அவரை அணியில் இருந்து நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டெல்லி அணியில் இருந்து விலகும் அவர் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் மகேந்திர சிங் தோனிக்கான மாற்று வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் ரிஷப் பந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவதாக வெளியான தகவலும் ஏறத்தாழ உறுதியானதாகவே தெரிகிறது. ஆனாலும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுலும் அந்த அணியில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை