ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்; வாய்ப்பை பெறுகிறாரா ஜுரெல்?

Updated: Fri, Jul 18 2025 21:38 IST
Image Source: Google

Rishabh Pant Injury: மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்த் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்றும் இதனால் துருவ் ஜூரெல் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. 

இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பின் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விரல் பகுதியில் காயத்தை சந்தித்தார். இதன் காரணமாக, அவர் களத்தில் இருந்து வெளியேறி துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இருப்பினும் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்வதற்காக மட்டும் களமிறக்கப்பட்டிருந்தார். இதனால் நான்காவது டெஸ்டில் பந்த் விளையாடுவாரா என்ற கேள்வியும் அதிகரித்திருந்தது.

ஒருவேளை அவர் இந்த போட்டியில் விளையாடினாலும் விக்கெட் கீப்பிங் செய்வாரா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென்டஸ்கடே, “நான்காவது டெஸ்டில் ரிஷப் பந்த் நிச்சயம் விளையாடுவார், ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது பற்றி எந்த முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. ஏனெனில் அவரது விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். 

ஏனெனில் போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார்” என்று கூறியுள்ளார். ஒருவேளை ரிஷப் பந்த் பேட்டராக மட்டும் விளையாடும் நிலையில், துருவ் ஜூரெலிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும். ஏற்கெனவே கருண் நாயர் போதிய ஸ்கோரை சேர்க்காத நிலையில், அவரது இடத்தில் ஜூரெல் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்: கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜாடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை