ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர். 

Advertisement

இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுதவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அடுத்த சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கயாம் காரணமாக ஓய்வில் இருந்த இளம் ஆல் ரவுண்டர் ரியான் பராக் தற்சமயம் அடுத்த சுற்று ரஞ்சி போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தவகையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அசாம் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரியான் பராக், கடந்தாண்டு நடைபெற்ற வங்கதேச டி20 தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்தும் அவர் விலகினார். மேற்கொண்டு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார். 

இந்நிலையில் தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரியான் பராக் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி முதல் மீண்டும் விளையடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ரஞ்சி கோப்பை தொடரின் 6 இன்னிங்ஸில் 378 ரன்களைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடப்பு சீசனில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News