தந்தையிடம் இருந்து அறிமுக போட்டிக்கான தொப்பியை வாங்கிய ரியான் பராக்!

Updated: Sat, Jul 06 2024 17:13 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவடி 20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய ஆழைத்தார். 

மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, மிடில் ஆர்டர் ரியான் பராக் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். முன்னதாக இப்போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வீரர்களுக்கு தொப்பியை வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது. 

அதன்படி இன்றைய போட்டியின் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமாகும் ரியான் பராக்கிற்கு, அவரது தந்தை பராக் தாஸ் அறிமுக ஆட்டத்திற்கான தொப்பியை வழங்கினார். அசாம் மாநில ரஞ்சி அணிக்காக விளையாடியுள்ள பராக் தாஸ், இன்று இந்திய அணிக்கு அறிமுகமான ரியான் பராக்கிற்கு அறிமுக போட்டிக்கான தொப்பியை வழங்கிய நிகழ்வானது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக விளையாடும் முதல் அசாம் மாநில வீரர் எனும் பெருமையையும் ரியான் பராக் பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரியான் பராக் 16 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 573 ரன்களைக் குவித்ததுடன், அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை