பாபர் ஆசம் மீண்டும் வலுவாக திரும்பி வருவார் - முகமது ரிஸ்வான் நம்பிக்கை!

Updated: Thu, Feb 13 2025 22:15 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

இத்தொடரின் இறுதிப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (பிப்ரவரி 14) நடைபெறும் நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியும் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளது. 

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் பாபர் ஆசாம் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரிஸ்வான், “பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்காக அதிக ரன்கள் எடுத்துள்ளார், ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சதம் அடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த அதீத எதிர்பார்ப்புகளை வைத்து நாம் அவரை மதிப்பிடவில்லை என்றால், அவர் இன்னும் நமக்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருவதை நீங்கள் காண்பீர்கள். ஒரு கேப்டனாக, கடந்த காலத்தில் அவர் செய்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, நான் அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக அவர் மீது கூடுதல் அழுத்தம் இருப்பது தெளிவாக தெரிகிறது, அவரும் அதை உணர்ந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் அவரது இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் இன்னும் ரன்கள் எடுத்து வருகிறார். அவருக்கு தெளிவான தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பது போல் தெரியவில்லை, ஆனால் அவரால் இன்னும் தனது முழுமையான ஃபார்மை மீட்டெடுக்க முடியவில்லை. அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை