பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டுகளையும், கீமார் ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

Advertisement

இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அபித் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அசார் அலி 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் சிறாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். இந்நிலையில், நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சீல்ஸ் 5 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. 

Advertisement

ஆனால் பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பிராத்வெயிட் 2 ரன், கிரன் பாவெல் 4 ரன், பானெர் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

அடுத்து இறங்கிய ரோஸ்டன் சேஸ், பிளாக்வு ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து 68 ரன்கள் சேர்த்த நிலையில், சேஸ் 22 ரன்னில் அவுட்டானார்.பொறுப்புடன் ஆடிய பிளாக்வுட் அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். பின்னர் வந்த ஹோல்டர் 16 ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது.

ஆனால் அடுத்து இறங்கிய கீமர் ரோச் நிதானமாக ஆடினார்.  இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது சீலஸ்க்கு அளிக்கப்பட்டது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News