கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர் -ராபின் உத்தப்பா!

Updated: Mon, Aug 12 2024 22:21 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. 

இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு காரணமாக அணியின் பேட்டர்கள் சரிவர செயல்படாததே என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீருன் தனது முதல் ஒருநாள் தொடரிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், கௌதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கௌதம் கம்பீர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக, மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கும் அவரது திறமைக்கு நான் உறுதியளிக்கிறேன். அவர் அந்த வகையான தலைவர். அதுமட்டுமின்றி ஒரு சிறந்த கேப்டன் என்பதை விட, அவர் ஒரு சிறந்த தந்திரவாதி மற்றும் ஒரு சிறந்த மக்கள் தலைவர். அவர் வெற்றியை ஊக்குவிக்கும் குழுவிற்குள் ஒரு கலாச்சாரத்தை வளர்க்கிறார்.

கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர், அதை நாம் அவரது செயலில் பார்த்தோம். மேலும் அவர் எப்பொழுதும் அழுத்தத்தின் கீழ் செழித்து வளரும் ஒருவராக இருந்துள்ளார். பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட  முயற்சிப்பவர் . என்னைப் பொறுத்த வரையில், இந்தக் குழுவிற்குள்ளேயே ஒரு தலைவராக இருக்கும் அதே குணங்களை நான் அவரிடம் காண்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, கௌதம் கம்பீருடன் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மேற்கொண்டு 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிலும், 2014ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கேகேஆர் அணியிலும் கௌதம் கம்பீருடன் இணைந்து ராபின் உத்தப்பா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் அடுத்த பணி, செப்டம்பர் 19 முதல் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாகும். இத்தொடருக்காக, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களை துலீப் கோப்பை தொடரில் விளையாடும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை