ஐசிசி சிறந்த டி20 அணி 2024: கேப்டனாக ரோஹித் சர்மா, லாரா வோல்வார்ட் நியமனம்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த டி20 அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான டி20 அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோஹித் சர்மா, மகளிர் டி20 அணிக்கான கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆடவர் அணியில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு வீரர்களும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்பே, இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளைச் சேர்த்த தல ஒரு வீரரும் இடம்பிடித்துள்ளன. இந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் இடத்தில் பில் சால்டும், நான்காம் இடத்தில் பாபர் ஆசமும், ஐந்தாம் இடத்தில் நிக்கோலஸ் பூரனும் இடம்பிடித்துள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர்கள் சிக்கந்தர் ரஸா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், வநிந்து ஹசரங்கா ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிருத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மறுபக்கம் மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்று ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் வரிசையில் சமாரி அத்தப்பத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து நான்காம் வரிசையில் ஹீலி மேத்யூஸும், ஐந்தாம் வரிசையில் நாட் ஸ்கைவர் பிரண்டும், 6ஆம் வரிசையில் அமெலியா கெரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அணியின் விக்கெட் கீப்பராக ரிச்சா கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர்களைத் தவிர்த்து மரிஸான் கேப், ஓர்லா பிரெண்டர்கேஸ்ட், தீப்தி சர்மா மற்றும் சதியா இக்பால் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஆண்டின் சிறந்த ஆடவர் டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன், இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), பில் சால்ட் (இங்கிலாந்து), பாபர் ஆசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ் ) , சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா) , ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) , அர்ஷ்தீப் சிங் (இந்தியா)..
Also Read: Funding To Save Test Cricket
ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமாரி அத்தபத்து (இலங்கை), ஹீலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கைவர் பிரண்ட் (இங்கிலாந்து), அமெலியா கெர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா), மரிஸான் கேப் (தென் ஆப்பிரிக்கா), ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து), தீப்தி சர்மா (இந்தியா), சதியா இக்பால் (பாகிஸ்தான்).