பும்ராவின் உடற்தகுதி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதில்!

Updated: Thu, Jul 27 2023 11:15 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவில் தொடங்குகிறது.

தற்பொழுது நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காவது இடத்திற்கான வீரர் யார்? இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? என்பதை கண்டறிவதற்கான மிக முக்கியமான தொடராகும். இந்தத் தொடருக்கு வீரர்கள் தயாராகி வருகின்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான கேள்விகள் பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்டது. 

அப்போதுரோஹித் சர்மாவிடம் பும்ரா பற்றிய கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த அவர், “பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது அவர் கொண்டு வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாத காரணத்தால் அவர் அயர்லாந்துக்கு செல்வாரா? என்று எனக்குத் தெரியாது.

அவர் விளையாடினால் அது நமக்கு நல்லது. அவர் விளையாடுவார் என்று நானும் நம்புகிறேன். ஒரு வீரர் கடுமையான காயத்திலிருந்து திரும்பும் பொழுது ஆட்டத்திற்கான உடல் தகுதி மற்றும் மேட்ச் ஃபீலிங் ஆகியவை முக்கியமானவை. ஆனால் அவையெல்லாம் தற்பொழுது காணப்படவில்லை.

அவர் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா என்று சொல்ல முடியாது. எல்லாமே அவர் குணமடைவதை பொறுத்து தான் இருக்கிறது. கையில் இருக்கும் திட்டத்தின் படி நாங்கள் மேற்கொண்டு பார்ப்போம். அதே சமயத்தில் நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில் விஷயங்கள் நேர்மறையாகவே செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தற்பொழுது பெங்களூரில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பின் கீழ் மறு வாழ்வில் இருந்து வருகிறார். அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் நம்பிக்கையானதாகவே இருக்கிறது. மேலும் அவர் தினமும் குறைந்தது ஏழு ஓவர்களுக்கு மேல் பந்து வீசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் மூலமாக அவர் வலையில் பந்து வீசும் காணொளியும் ஒன்றும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை