IND vs WI: ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது குறித்து ரோஹித் சர்மா!

Updated: Thu, Feb 17 2022 15:19 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில் போட்டி முடிந்து ஸ்ரேயாஸ் ஐயர் அணிகள் இணைக்கப்படாதது குறித்து ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒரு வீரரை வெளியில் அமர வைப்பது மிகவும் ஒரு கடினமான முடிவு தான். அவரை பிளேயிங் லெவனில் எடுக்க முடியாமல் போனது மிக வருத்தமான ஒன்று. இருப்பினும் அணிக்கு எது தேவையோ அதை நாம் செய்தாக வேண்டிய அவசியம் உள்ளது.

அந்த வகையில் மிடில் ஓவர்களில் பந்துவீசும் சில பேட்ஸ்மேன்கள் தேவை. அந்த ஒரு காரணமாகத்தான் இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் அணியில் இடம் பிடிக்க வீரர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவது அணியின் பென்ச் வலிமையை காட்டுகிறது.

அதோடு இன்றைய போட்டியில் நமது வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பான பார்ம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதோடு எதிர்வரும் உலகக் கோப்பைக்கு நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருப்பார்” என்றும் ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை