டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியும், நானும் விளையாடாததற்கு இதுதான் காரணம் - ரோஹித் சர்மா!

Updated: Mon, Aug 07 2023 21:44 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இந்தியா கைப்பற்றி இருக்கும் நிலையில் தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. சமீபகாலமாகவே டி20 போட்டி தொடர்களில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்தியா விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோருக்கு தொடர் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இதனால் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் ரசிகர்கள் பலருக்கும் எழுந்திருக்கிறது  இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார் இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனான ரோஹித் சர்மா.

பேசிய அவர், “வீரர்களின் பனிச்சுமை மேலாண்மையை கருத்தில் கொண்டு இந்த வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். எல்லா வீரர்களாலும் எல்லா வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது. போட்டிகளின் அட்டவணைகளும் அடுத்தடுத்து வரும் போட்டிகளும் வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது.

இந்தியாவின் சிறந்த வீரர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஓய்வு நேரத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். இந்த ஓய்வு காலத்தில் அவர்கள் தங்களது உடல் தகுதியையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டு உலக கோப்பையை அணுக ஒரு வாய்ப்பாக அமையும்” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் சமீப காலமாகவே இந்திய அணியில் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலி ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜா முகமது சமி போன்ற வீரர்களுக்கு தொடர் ஓய்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதோடு இளம் வீரர்களுக்கு சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது .

ரோஹித் சர்மாவின் பேட்டியில் இருந்து 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சமீப காலமாகவே அதிக அளவு இந்திய வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வருவதால் மூத்த வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கையை தேர்வாளர்கள் எடுத்திருக்கின்றனர்.

இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் அடுத்த இலக்காக 2024 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை தான் இருக்கும் . அப்போது அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் சில கிரிக்கெட் வட்டாரங்களின் தகவல்களின்படி ஐம்பது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய டி20 கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவிடம் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை