ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும் என ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் தனது விக்கெட்டை இழந்திருந்தார். 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் 10 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அணியின் மற்றொரு தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 17 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்துள்ளனர். இதனால் அந்த் அணி 43 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. 

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் லெவன்: பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பேக்ட் பிளேயர்கள் - பிரியான்ஷ் ஆர்யா, ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே, விஷ்ணு வினோத் வைஷாக் விஜய்குமார்

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங், சந்தீப் சர்மா.

இம்பேக்ட் பிளேயர்கள் - குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News