200 ஒரு ஸ்பேஷலான நம்பர் - ஷமிக்கு ரோஹித் வாழ்த்து!

Updated: Wed, Dec 29 2021 14:58 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3-வது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

மேலும் இந்த 200 விக்கெட்டுக்களை அவர் குறைந்த பந்துகளில் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்காக தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முகமது ஷமிக்கு இந்திய அணியின் முன்னணி வீரரும், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா தனது பாராட்டுக்களை சமூக வலைதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இரட்டை சதம் #200 என்பது ஒரு ஸ்பெஷலான நம்பர் ”என்று முகமது ஷமியைப் பாராட்டி அவர் தனது பதிவை இட்டுள்ளார். மும்பையிலிருந்து அந்த பதிவு வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்போது ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்று தெரிகிறது.

ரோஹித் சர்மா மட்டுமின்றி இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமியின் இந்த சாதனைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை