IND vs AUS, 2nd T20I: இந்திய அணியில் அவசர ஆலோசனைக் கூட்டம்!

Updated: Fri, Sep 23 2022 10:29 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 208 ரன்களை குவித்த போதும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.

ஆசிய கோப்பை தொடரிலும் இதே போன்ற தவறுகளால் தான் இந்தியா இறுதிப்போடிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சமயத்தில் இந்திய அணியின் பவுலிங் இவ்வளவு மோசமாக இருப்பது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இதனை சரிசெய்ய அணிக்குள் அவசர மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ரே, வீரர்களின் மனநல மேம்பாட்டாளர் பேடி அப்டன் ஆகியோரின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா உட்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் இடம்பெறவுள்ளனர். 

கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர். இந்தியாவின் பந்துவீச்சு தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் வீரர்கள் மனதளவில் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். எனவே அவர்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் யுவேந்திர சாஹலுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு ஒவ்வொரு பந்துவீச்சாளருடனும் மனநல மேம்பாட்டாளர் பேடி அப்டன் தனித்தனியாக பேசவுள்ளார். அப்போது வீரர்களுக்கு மனதளவிலான நம்பிக்கையை கொடுக்கவுள்ளார். விராட் கோலிக்கு கொடுத்ததை போன்றே பவுலர்களுக்கும் பழைய காணொளிகள் போட்டு காட்டப்படவுள்ளதாக தெரிகிறது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை