ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!

Updated: Thu, Mar 23 2023 17:28 IST
Rohit Sharma On Workload Management During IPL 2023! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது. சென்னையில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் விளையாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 248 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட்டானது.

இந்திய அணிக்கு அடுத்த சர்வதேச சவாலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரவுள்ளது. ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆனால் இதற்கு தயாராவதில் தான் இந்திய வீரர்களுக்கு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அடுத்த 2 மாதங்களுக்கு அவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளனர். மே 28ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இது முடிந்த ஒரு வாரத்திற்குள் டெஸ்ட் ஃபார்மெட்டிற்கு மாற வேண்டும்.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடுவதால் பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். 

அதில், “இனி ஐபிஎல் அணிகளின் கைகளில் தான் எல்லாம் உள்ளது. வீரர்களின் பணிச்சுமை குறித்தும், அவர்களின் எல்லை என்னவென்பது குறித்தும் அணி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை சென்றுவிட்டது. எனினும் அனைத்து முடிவுகளும் அவர்களின் கைகளில் தான் உள்ளது. முக்கியமாக வீரர்களின் கைகளில் தான் எல்லாம் உள்ளது எனக்கூறலாம். வீரர்கள் தான் அவர்களின் உடல்நிலையை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

உடல்நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுவதாக தெரிந்தால், உடனடியாக ஓய்வு தேவை என அணி நிர்வாகத்திடம் கேட்டு பெற வேண்டும். ஆனால் அவை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. முக்கியமான சமயத்தில் வீரர்கள் இல்லை என்று வரும் தகவல் தான் சவாலானதாக இருக்கும். உண்மையை சொல்லப்போனால் அனைவருமே முடிந்தவரை போராடி வருகின்றானர். வீரர்களின் காயங்கள் குறித்து எனக்கு எதுவும் சொல்ல தெரியாது. ஆனால் உலகக்கோப்பைக்கு எப்படியாவது கொண்டு சென்று சேர்த்துவிட வேண்டும் என பிசிசிஐ மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை