இவர் தான் மிகவும் கடினமான பவுலர் - ரோஹித் சர்மா!

Updated: Fri, Sep 29 2023 12:19 IST
Image Source: Google

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இன்று 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதோடு, அவர் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார்.

இந்திய அணிக்கு அவர் உள்ளே வருவதற்கு முன்பான ஆரம்ப காலங்கள் அவர் குறித்த அதிக நம்பிக்கையை வெளியுலகத்திற்கு காட்டியது. அந்த அளவிற்கு வளர்ந்து வரும் இளம் வீரராக அவர் உள்நாட்டில் விளங்கினார். அதே சமயத்தில் இந்திய அணிக்கு தேர்வான பிறகு அவரால் எதிர்பார்த்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவருக்கென்று அணியில் நிரந்தரமான ஒரு இடமில்லை. மேலும் அணிக்கு வெளியே உள்ளே என்றுதான் போய் வந்து கொண்டு இருந்தார். 

இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இந்திய அணியில் கடைசி நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்து 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக கொண்டு வந்தார். இது அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவு. ஆனால் இன்றுவரை அது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கக்கூடிய முடிவாக இருக்கிறது.

இதற்குப் பிறகு ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை படைத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரராக தம்மை பதிவு செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஒவ்வொரு விஷயத்திலும் யார் சிறந்தவர்கள் என்பது குறித்தான கேள்வி ரோகித் சர்மாவிடம் முன்வைக்கப்பட்டது. 

அதிலும் மிகக்குறிப்பாக தான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பந்துவீச்சாளார் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் என்று பதிலளித்துள்ளார். மேலும் விராட் கோலியின் கவர் டிரைவ் டெக்னிக், மற்றும் சூர்யகுமார் யாதவின் ஸ்கூர் ஷாட் ஆகியவை தனக்கு பிடித்தமான ஓன்றும் எனவும் பதிலளித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை