பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!

Updated: Wed, Apr 16 2025 22:31 IST
Image Source: Google

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வந்தது.

அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மின் காரணமாக மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார். இதனால் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா மனம்திறந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலையில் ஸ்காட் போலந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. அவரது பிட்ச் வரைபடத்தை நாங்கள் சரிபார்த்தபோது, ​​அவரது 90% பந்துகளை சரியான இடத்தில் இருந்து வீசுகிறார். அதிலும் குறிப்பாக அதிக அகலமான பந்துகளும் இல்லாம, அதிக ஃபுல்லர் பந்துகளும் இல்லாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்தை வீசி பேட்டர்களுக்கு அழுத்தத்தை வழங்கியுள்ளார். 

இத்தொடரில் நான் என்னைப் பற்றி நேர்மையாகச் கூற வேண்டும் எனில் நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை. மேலும் அதற்காக மட்டும் விளையாட விரும்பவில்லை. மேலும் சில பந்துகளை எதிர்கொள்ள சிலர் சிரமப்பட்டனர், அதனால் நாங்கள் உண்மையில் ஷுப்மன் கிலை தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று விரும்பினோம். அவர் ஒரு நல்ல வீரர், முந்தைய டெஸ்டைத் தவறவிட்டார், எனவே அவர் ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்று நாங்கள் உணர்ந்தோம்.

நான் சொன்னது சரி, நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை என்றால், அதை கட்டாயப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று நான் சொன்னேன். சுற்றுப்பயணத்தில் இருந்த பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரிடம் பேசினேன். அவர்களும் ஒருவிதத்தில் ஒப்புக்கொண்டாலும், மற்றொரு விதத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் அணியை முதலில் வைக்க முயற்சி செய்யும் போது, அணிக்கு என்ன தேவை என்பதைப் பார்த்து, அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

உண்மையில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேற்கொண்டு தனது மோசமான ஃபார்மின் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய அவர், கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ராவிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை