ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Updated: Thu, Jun 30 2022 19:21 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி(நாளை) முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கரோனா பாசிட்டிவ் ஆனது.

லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி  போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கொரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.

ரோஹித் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்பட்ட நிலையில், நேற்று வரை அவர் கொரோனாவிலிருந்து மீளவில்லை. எனவே அவர் ஆடாதபட்சத்தில் யார் கேப்டன் என்பது பெரும் விவாதமாக இருந்துவருகிறது.

கேஎல் ராகுலும் ஆடாததால் ரிஷப் பந்த் கேப்டன்சி செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவரது கேப்டன்சி திருப்தியளிக்கும் விதமாக இல்லை. அவர் பக்குவமற்ற கேப்டனாக இருக்கிறார் என்பதால், டெஸ்ட்டில் கேப்டன்சி செய்யும் அளவிற்கு தகுதியான கேப்டன் அவர் இல்லை என்பதால் யார் கேப்டன் என்பது கேள்வியாக இருந்துவந்தது.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனையை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதன்மூலம் கபில் தேவுக்கு அடுத்து  இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தும் வேகப்பந்து வீச்சு கேப்டன் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை