ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா!

Updated: Fri, Oct 13 2023 19:52 IST
Image Source: Google

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதற்குமுன், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7 முறை களமிறங்கி, அனைத்திலும் வென்றிருக்கிறது. இதனால், நாறைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டமாக செயல்பட்டு, ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களையும் சேஸ் செய்து அபார வெற்றியைப் பெற்றிருகிகறது. இதனால், இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகையால், நாளை கடைசி ஓவர் வரை கூட ஆட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில், தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்டார். இதுகுறிடதது பேசிய ரோஹித் ஷர்மா, “ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார்” எனக் கூறினார். 100% சதவீதம் உறுதியென அவர் கூறாதது உற்றுநோக்க கூடியதாக இருக்கிறது. 

இந்நிலையில், மாலை நேர பயிற்சியின் போது சக வீரர்களுடன் ஷுப்மன் கில் கலந்துகொண்டார். அப்போது, பேட்டிங் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை, தடவிப் பார்த்து ஷுப்மன் கில் பார்வையிட்டார். இதன்மூலம் நாளைய ஆட்டத்தில் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை ஷுப்மன் கில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை