இந்திய அணியின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!

Updated: Mon, Sep 19 2022 12:32 IST
Rohit Sharma: Team Will Continue With Attacking Batting Approach (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி கட்ட பயிற்சி இந்த தொடர் தான் ஆகும். எனவே இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இல்லாததால் ஆசிய கோப்பையில் சொதப்பிய இந்தியாவுக்கு, இந்த முறை முழு பலமும் உள்ளது. எனினும் இனி வரும் போட்டிகளில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வருவீர்களா?, இந்தியாவின் அணுகுமுறை இனி எப்படி இருக்கும் என பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் அதற்கெல்லாம் ரோஹித் சர்மா தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “வரவுள்ள அடுத்த 6 போட்டிகளிலும் நாங்கள் என்னவெல்லாம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோமோ, அதனை செய்வோம். பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எந்தவித எல்லைகளும் கிடையாது. எனவே வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை பெறுவோம்.

கேப்டனாக பொறுப்பேற்றவுடனே இந்த ஆக்ரோஷ அணுகுமுறை குறித்து தெளிவாக பேசிவிட்டேன். அணி 10 /3 ரன்கள் என்ற நிலையில் இருந்தால் எப்படி ஆட வேண்டும், 50/0 என்ற நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது வீரர்களுக்கு நன்றாக தெரியும். எனவே திட்டங்கள் தீட்டும் நேரம் முடிந்துவிட்டது. இனி செயல்பாடுகளில் இறங்குவது தான்.

10 மாதங்களாக வீரர்களின் செயல்பாடுகள் குறித்து எந்தவித ஆலோசனைக் கூட்டமும் நடந்தவில்லை. இந்த 6 போட்டிகள் முடிந்தவுடன் மீண்டும் அதனை நடத்துவோம். அதில் டி20 உலகக்கோப்பையில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை