பயிற்சியின் போது ரோஹித்திற்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்?

Updated: Tue, Jun 06 2023 21:38 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நாளை தொடங்க இருக்கிறது . இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு பத்தாண்டுகளாக இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டி 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் அரை இறுதி போட்டி 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டி என தொடர் தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது .

தற்போது மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது . 2023 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய எதிர்த்து விளையாட இருக்கிறது . கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது . 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது . 

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது . இதனால் நிச்சயமாக இந்த முறை இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் . இந்நிலையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தி இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கிறது . இந்திய வீரர்கள் போட்டிக்கு தயாராக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . இந்த காயத்தை தொடர்ந்து அவர் வலை பயிற்சியிலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இதனால் அவர் போட்டியில் பங்கேற்பது தொடர்பான சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகர்கள் இடையே எழுந்திருக்கிறது . ஒருவேளை ரோஹித் சர்மா பங்கேற்க முடியவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் . 

பேட்டிங் மற்றும் கேப்டன் என இரு பொறுப்புகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருபவர் ரோகித் சர்மா . கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . நேற்றைய நடைபெற்ற வலை பயிற்சியில் த்ரோ டவுன் முறையில் பந்துகளை எதிர்கொண்ட போது ரோஹித் சர்மாவின் கைவிரலில் பந்து ஒன்று தாக்கியிருக்கிறது . இதனால் அவர் வலை பயிற்சியிலிருந்து விலகி இருக்கிறார் . 

அவருக்கு ஏற்பட்ட காயம் லேசானது தான் என்றும் நிச்சயமாக அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்றும் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது . மேலும் வலை பயிற்சியை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார் ரோஹித் சர்மா . இதனால் அவர் நிச்சயமாக போட்டியில் பங்கேற்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர் .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை