ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Oct 05 2021 20:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் ஆர்சிபி அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், இப்போட்டி நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி நடப்பு சீசனில் 8 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

அதிலும் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பந்துவீச்சில் ஹர்சல், சஹால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பலமாக அமைந்துள்ளது. 

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளதால், இப்போட்டியிலாவது வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -19
  • ஆர்சிபி வெற்றி -8
  • எஸ்ஆர்எச் வெற்றி - 10

உத்தேச அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன்/ டிம் டேவிட், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன் (கே), பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார்/ சந்தீப் சர்மா, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்- ஸ்ரீகர்-பாரத்
  • மட்டைகள் - தேவதூத் பாடிக்கல், விராட் கோலி, அப்துல் சமத், ஜேசன் ராய்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜேசன் ஹோல்டர், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல், ரஷித் கான்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை