ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி நடையை தொடர்ந்து வருகிறது. இதனால் அந்த அணி தங்களது வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

சஞ்சு சாம்சன் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருந்து வருகிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜுரெல் போன்ற வீரர்கள் சிறப்பான செயல்பட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் கடந்த போட்டியில் ஜோஸ் பட்லர் தனது ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. 

அந்த அணியின் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆவேஷ் கான், ரியான் பராக் ஆகியோரும் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருவதால் அதனை தக்கவைத்துக்கொள்ள அந்த அணி முயலும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

அதேசமயம் மறுபக்கம் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  அதிலும் கடந்த போட்டியில் அந்த அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த போதிலும் பின் வரிசை வீரர்கள் சொதப்பியத காரணமாக தோல்வியைத் தழுவியுள்ளது. மேலும், ஷுப்மன் கில், விஜய் சங்கர் போன்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் டேவிட் மில்லரும் கடந்த சில போட்டிகளில் இடம்பெறாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பந்துவீச்சை பொறுத்தமட்டில் ரஷித் கான், நூர் ரஹ்மத், மொஹித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் நிச்சயம் எதிரணிக்கு பெரும் சவாலை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த சில போட்டிகளில் அந்த அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால், தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் அந்த அணி கம்பேக் கொடுக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் சுமார் 160 ரன்களாக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி, போட்டியில் தனது பிடியை வலுப்படுத்த குறைந்தபட்சம் 175 ரன்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது பேட்டர், பந்துவீச்சாளர்கள் என சமநிலையான ஆடுகளமாக காணப்படுவதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்– 05
  • குஜராத் டைட்டன்ஸ் - 04
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பெர்கர், யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), கேன் வில்லியம்சன், பி.ஆர்.ஷரத், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோஹித் சர்மா.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர் (கேப்டன்), சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன், ஷுப்மன் கில் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன்
  • ஆல்ரவுண்டர் - ராகுல் தெவாடியா, ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், மோஹித் சர்மா, ரஷித் கான், நந்த்ரே பர்கர்.

RR vs GT IPL 2024 Dream11 Prediction, Today Match RR vs GT, RR vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, RR vs GT Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Rajasthan Royals vs Gujarat Titans

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News