Rajasthan Royals vs Kolkata Knight Riders, IPL 2024 Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றில் கேகேஆர், ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ள நிலையில், இன்றைய தினம் மீதமுள்ள ஒரு இடமும் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், முதலிரண்டு இடங்களை பிடிப்பதற்கான போட்டியாக இது அமையவுள்ளது. அதுமட்டுமின்றி ராஜஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ர உத்வேகத்துடன் களமிறங்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

RR vs KKR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

RR vs KKR, Pitch Report

பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மிகவும் தட்டையானது என்பதால் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இருக்காது. இதனால் இங்கு அதிக ஸ்கோரை பேட்டர்கள் குவிக்கலாம். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

RR vs KKR Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 14
  • கொல்கத்த நைட் ரைடர்ஸ் - 14
  • முடிவில்லை - 01

RR vs KKR Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Rajasthan Royals vs Kolkata Knight Riders Probable Playing XI

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோல்ஹர்-காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

RR vs KKR, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல்
  • ஆல்-ரவுண்டர் - சுனில் நரைன் (துணைக் கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

RR vs KKR Dream11 Prediction, Today Match Prediction, Today Match RR vs KKR, RR vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, RR vs KKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Rajasthan Royals vs Kolkata Knight Riders

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News