ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Mar 22 2024 14:25 IST
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

ஐபிஎல் தொடரின் 17ஆவடு சீசன் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்
  • நேரம் - மதியம் 3.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் முதல் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் சுமார் 160 ரன்களாக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி, போட்டியில் தனது பிடியை வலுப்படுத்த குறைந்தபட்சம் 175 ரன்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது பேட்டர், பந்துவீச்சாளர்கள் என சமநிலையான ஆடுகளமாக காணப்படுவதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 02
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01

உத்தேச லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், நந்த்ரே பெர்கர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஷமார் ஜோசப், அவேஷ் கான், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - கைல் மேயர்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், ரவி பிஷ்னோய்.

RR vs LSG IPL 2024 Dream11 Prediction, Today Match RR vs LSG, RR vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, RR vs LSG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Rajasthan Royals vs Lucknow Super Giants

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை