இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. இதில் ஏற்கெனவே இத்தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் சுமார் 160 ரன்களாக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி, போட்டியில் தனது பிடியை வலுப்படுத்த குறைந்தபட்சம் 175 ரன்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது பேட்டர், பந்துவீச்சாளர்கள் என சமநிலையான ஆடுகளமாக காணப்படுவதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 13
  • மும்பை இந்தியன்ஸ் - 15
  • முடிவில்லை - 01

நேருக்கு நேர்

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

Advertisement

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்..

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா, ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, குல்தீப் சென்.

RR vs MI IPL 2024 Dream11 Prediction, Today Match Prediction, Today Match RR vs MI, RR vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Rajasthan Royals vs Mumbai Indians

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News