Rajasthan Royals vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்திருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று அதனை உறுதிசெய்யும் செய்ய முயற்சிக்கும் என்பாதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

RR vs PBKS Match Details

  • மோதும் அணிகள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் -  சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம், ஜெய்ப்பூர்
  • நேரம் - மே 18, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

Sawai Mansingh Stadium, Jaipur Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 59ஆவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் முதலில் பந்துவிசிய அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 161 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 166 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

RR vs PBKS: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RR vs PBKS Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 17
  • பஞ்சாப் கிங்ஸ் - 12

RR vs PBKS Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக்கேப்டன்), ஷஷாங்க் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரியன்ஸ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, ரியான் பராக், மார்கோ ஜான்சன்
  • பந்து வீச்சாளர்கள்- யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
Advertisement

RR vs PBKS Predicted Playing 11

Rajasthan Royals XI : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, யுத்விர் சிங், ஆகாஷ் மத்வால், துஷார் தேஷ்பாண்டே.

இம்பேக்ட் வீரர் - லுவான் ட்ரே பிரிட்டோரியஸ்

Advertisement

Punjab Kings XI : பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், வைசாக் விஜய் குமார், சேவியர் பார்ட்லெட்.

இம்பேக்ட் வீரர் - கைல் ஜேமீசன்

RR vs PBKS Dream11 Prediction, RR vs PBKS, RR vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RR vs PBKS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Rajasthan Royals vs Punjab Kings

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News