Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, IPL 2024 Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றில் கேகேஆர், ராஜஸ்தான், ஹைதராபாத், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ள நிலையில் இத்தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

RR vs RCB: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

RR vs RCB, Pitch Report

நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்ஸ்மேன் பெரிய இன்னிங்ஸை விளையாடலாம். மேலும் இங்கு பெரிய எல்லைகள் இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போதும் விளையாட்டில் இருப்பார்கள். இந்த மைதானத்தில் டி20 வடிவத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

RR vs RCB Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 31
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 13
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 15
  • முடிவில்லை - 03

RR vs RCB Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru Probable Playing XI

ராஜஸ்தான் ராயல்ஸ்: டாம் கோஹ்லர் காட்மோர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லோக்கி ஃபெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்

RR vs RCB: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், ரியான் பராக், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள்: சந்தீப் சர்மா, யாஷ் தயாள், டிரென்ட் போல்ட்

RR vs RCB Dream11 Prediction, Today Match Prediction, Today Match RR vs RCB, RR vs RCB Dream11 Team, RR vs RCB Head-to-Head Record, Fantasy Cricket Tips, RR vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Rajasthan Royals vs Royal Challengers Bengaluru

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News