இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணியிலும் இடம்பிடிக்கும் கணிப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்

Advertisement

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், யுவேந்திர சாஹல் கூட்டணி பெங்களூரு பேட்டிங் வரிசைக்குஅழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணிக்கு பெரிதளவில் எடுபடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பெர்கர், யுஸ்வேந்திர சாஹல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Advertisement

ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் அணியின் பந்து வீச்சும் வலுவானதாக இல்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள், சுழற்பந்து வீச்சாளர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். ஆனால், இவர்கள் எந்த ஒரு ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் பார்மின்றி தடுமாறுவது அணிக்கு மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. 

ஆர்சிபி உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல் / வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், யாஷ் தயாள்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News