புவனேஷ்வர் குமார் ஓவரில் சிக்ஸர் விளாசிய கெய்க்வாட் - காணொளி!

Updated: Fri, Apr 05 2024 20:42 IST
புவனேஷ்வர் குமார் ஓவரில் சிக்ஸர் விளாசிய கெய்க்வாட் - காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், இன்று நடைபெற்றுவரும் 18ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, மஹீஷ் தீக்ஷனா மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் ஹைதராபாத் அணியில் நிதீஷ் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் 26 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

 

இதனால் சிஸ்கே அணி 54 ரன்களுக்கு  2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ஜோடி சேர்ந்துள்ள அஜிங்கியா ரஹானே - ஷிவம் தூபே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பவர்பிளேவின் கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் கெய்க்வாட் சிக்சர் அடித்து அசத்தினார். 

குறிப்பாக அந்த ஓவரில் அஜிங்கியா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்வாட் இருவரும் இணைந்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்களைச் சேர்த்து அசத்தினர். இந்நிலையில் புவனேஷ்வர் குமார் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த அந்த சிக்சர் குறித்த காணொளி தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை