எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இதை செய்ததால் வெற்றி பெற்றோம் - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Mon, Apr 15 2024 13:09 IST
எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இதை செய்ததால் வெற்றி பெற்றோம் - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே ஆகியோரின் அரைசதத்தின் மூலமும், மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஃபினிஷிங் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா சதமடித்ததைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூல சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இப்போட்டியில் எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (எம் எஸ் தோனி) வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்ததுதான் வெற்றிக்கு உதவியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸுக்குமான வித்தியாசமும் அதுதான். இந்த மைதானத்தில் முதலில் விளையாடும் போது 10, 15 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டும். நாங்கள் 215 முதல் 220 ரன்கள் வரும் என்று எதிர்பார்த்து  இருந்தோம். 

ஆனால் பும்ரா சிறப்பாக பந்துவீசி எங்களைக் கட்டுப்படுத்தினார். எங்கள் அணியின் மலிங்கா அபாரமாக பந்து வீசி இருந்தார். யார்க்கர்களை துல்லியமாக வீசினார். மேலும், துஷார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தனர் என்பதை மறந்துவிட கூடாது. அஜிங்கியா ரஹானே சில ஃபிட்னெஸ் ரீதியாக பிரச்சனையை சந்தித்துள்ளார்.

 

இதன் காரணமாக  அவரைத் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினால் சரியாக இருக்கும் என யோசித்தேன். மேலும் நான் பேட்டிங்கில் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் பேட் செய்வேன். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதோடு அணியின் கேப்டன் என்ற பொறுப்பிலும் அந்த முடிவை நான் எடுத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை