பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!

Updated: Thu, Oct 24 2024 13:00 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது.

மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நள் பயிற்சி போட்டியிலும், ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது. இதில் நான்குநாள் பயிற்சி ஆட்டமானது அக்டோபர் 31ஆம் தேதியும், மூன்றுநாள் பயிற்சி ஆட்டமானது நவம்பர் 15ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடர்களுக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்த அணிக்கு, அபிமன்யூ ஈஸ்வரன் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு சாய் சுதர்ஷன், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், யாஷ் தயாள், கலீல் அஹ்மத், நிதீஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடவுள்ள இந்திய் ஏ அணி இன்றைய தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது. அதன்பாடி இந்திய ஏ அணி வீரர்கள் விமானம் மூலம் ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ள புகைப்படங்களானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கே), அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், அபிஷேக் போரல், முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், தனுஷ் கோட்டியான்

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா ஏ vs ஆஸ்திரேலியா ஏ அட்டவணை

  • அக்டோபர் 31 - நவம்பர் 03 :கிரேட் பேரியர் ரீஃப் அரங்கம், மேக்கே
  • நவம்பர் 07 - 10: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்   
  • நவம்பர் 15-17: பெர்த் கிரிக்கெட் மைதானம், பெர்த்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை