தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ரியான் ரிக்கெல்டன் - கேப்டன் டெம்பா பவுமா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். பின் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்திருந்த நிலையில், டெம்பா பவுமா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாமும் 6 ரன்னுடன் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்த நிலையில் ரிக்கெல்டன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்கோ ஜான்சனும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கைல் வெர்ரைன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News