South Africa vs England Dream11 Prediction, ICC Champions Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Advertisement

அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

SA vs ENG ICC Champion Trophy 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து
  • இடம் -  தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - மார்ச் 01, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs ENG Match Pitch Report

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 80 ஓருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 38 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 39 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 240 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 374 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால், நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SA vs ENG: Where to Watch?

Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SA vs ENG ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 70
  • தென் ஆப்பிரிக்கா - 34
  • இங்கிலாந்து - 30
  • முடிவில்லை - 06

SA vs ENG Dream11 Team, ICC Champions Trophy 2025

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ரியான் ரிக்கல்டன் (துணை கேப்டன்)
  • பேட்டர்கள் - பென் டக்கெட், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஜோ ரூட் (கேப்டன்), டெம்பா பவுமா
  • ஆல்ரவுண்டர்கள் - வியான் முல்டர், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், ககிசோ ரபாடா.
Advertisement

South Africa vs England Probable Playing XI

South Africa Probable Playing XI: ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

England Probable Playing XI: பில் சால்ட், பென் டக்கெட், டாம் பான்டன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், மார்க் வூட்

Advertisement

SA vs ENG ODI Dream11 Prediction, SA vs ENG Dream11 Prediction, Today Match SA vs ENG, ICC Champion Trophy 2025, SA vs ENG Dream11 Team, SA vs ENG Pitch Report, Today Match Prediction, Fantasy Cricket Tips, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs England 

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News