தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர்.

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடியில் இருவரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யாவுடன் இணைந்த ரிங்கு சிங் முதல் பந்திலிருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் கேப்டன் இன்னிங்ஸை விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் மறுப்பக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதில் இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களை எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், ஐடன் மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News