SA vs IND: கேட்ச்சில் சதமடித்த கோலி!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் பவுமாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் விராட் கோலி. இது அவரது 100ஆவது டெஸ்ட் கேட்ச் சாதனை.
விராட் கோலி 99 டெஸ்டில் 168 இன்னிங்சில் 100 கேட்ச் பிடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 100 கேட்ச் பிடித்த 6ஆவது வீரர் விராட் கோலி ஆவார்.
முன்னதாக ராகுல் டிராவிட் 163 டெஸ்டில் 299 இன்னிங்சில்209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். வி.வி.எஸ். லட்சுமண் (135), தெண்டுல்கர் (115), கவாஸ்கர் (108), அசாருதீன் (105) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.