தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Nov 12 2024 11:26 IST
Image Source: Cricketnmore

South Africa vs India 3rd T20I Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிப்பதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் வாய்ப்பை பெறுவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் பெறும். மேற்கொண்டு இரு அணியில் உள்ள பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஃபார்ம்மில் இருப்பதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

SA vs IND 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானம், செஞ்சூரியன்
  • நேரம் - நவம்பர் 13, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs IND 3rd T20I Pitch Report

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 16 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 7 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 175 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 259 ரன்கள் உள்ளது. இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம்போல் விளையாட முடியும் என்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SA vs IND 3rd T20I: Where to Watch?

தென் ஆப்பிரிக்கா - இந்தியா டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

SA vs IND T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • தென் ஆப்பிரிக்கா - 12
  • இந்தியா - 16
  • முடிவில்லை - 01

South Africa vs India 3rd T20I Probable Playing XI

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ஒட்னீல் பார்ட்மேன், பேட்ரிக் க்ரூகர்.

இந்தியா உத்தேச லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா/ரமந்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/வைஷாக் விஜயகுமார், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

SA vs IND 3rd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர் - அக்ஸர் படேல்(கேப்டன்), ஹர்திக் பாண்டியா,மார்கோ ஜான்சன் (துணைக்கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்திஅர்ஷ்தீப் சிங், ஜெரால்ட் கோட்ஸி.

SA vs IND 3rd T20I Dream11 Prediction, SA vs IND Dream11 Prediction, Today Match SA vs IND, SA vs IND T20I Series, SA vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs India

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை