SA vs IND: ரோஹித் சர்மா இல்லாத இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!

Updated: Fri, Dec 31 2021 22:04 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா, காயம் காரணமாக இத்தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் துணைக்கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் 4ஆண்டுகளுக்கு பிறகு அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

இந்திய அணி: கேஎல்ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை