SA vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுக்கும் ஜெயந்த் யாதவ்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதியுடன் முடிவடையயுள்ள நிலையில், ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் இத்தொடருக்கான கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு மாற்று வீரர்காக 31 வயதான ஜெயந்த் யாதவை ஒருநாள் அணியில் சேர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயந்த் யாதவ் முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவர் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து ஜெயந்த் யாதவிற்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.