இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. 

Advertisement

இந்நிலையில் ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

ஏற்கனவே இந்திய அணி செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இருந்ததால் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் கேப்டன் விராத் கோலியின் விலகல் இந்திய அணியில் பெரிய பாதகமாக அமைந்தது. முதுகு வலி காரணமாக இரண்டாவது போட்டியில் விராத் கோலி விளையாடாததால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியை வழி நடத்தினார்.

இப்படி தான் வழி நடத்திய முதல் போட்டியிலேயே ராகுல் தற்போது தோல்வியை சந்தித்து இருக்கிறார். இந்நிலையில் 3ஆவது போட்டியில் விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்து போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல், “தற்போது விராட் கோலி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாகவே வலைப்பயிற்சியில் பீல்டிங்கும் செய்து வருகிறார். எனவே அவரது உடல்நிலை தற்போது அடுத்த போட்டிக்கு விளையாடும் அளவிற்கு தயாராக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட வேண்டும் அதுவே என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News